×

அஞ்சுகிராமத்தில் நாளை பள்ளி கல்வித்துறை அறிவியல் கண்காட்சி

நாகர்கோவில், நவ.27 : குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புகளுக்கான கண்காட்சி அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 28ம்தேதி (நாளை) நடக்கிறது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப படைப்புகளுக்காக இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் துவக்கி வைக்க உள்ளார். மேலும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். கண்காட்சியில் வைக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம் வடநேரே பரிசுகளை வழங்கி பேச உள்ளார். நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரோகிணி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து நடத்துகின்றனர். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : science exhibition ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி