×

கன்னியாகுமரியில் நேற்று தொடங்குவதாக இருந்தது இளைஞர் காங். ரத யாத்திரை டிச.7க்கு மாற்றம் தேசிய செய்தி தொடர்பாளர் தகவல்

நாகர்கோவில், நவ. 27:  இளைஞர் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் அம்ரீஸ் ரஞ்சன் பாண்டே நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 கன்னியாகுமரியில் இருந்து இன்று (நேற்று) புறப்படுவதாக இருந்த இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய ரத யாத்திரை தவிர்க்க முடியாத காரணத்தால் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரை தேசம் காப்போம் என்பதை வலியுறுத்தியும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் நடத்தப்படுகிறது.கேரள மாநிலம் வழியாக காஷ்மீர் வரை செல்லும் இந்த ரத யாத்திரை ராஜ்கட் என்ற பகுதியில் நிறைவுபெறுகிறது. பாஜ ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராமர் கோயில் பிரச்னையை அரசியல் ஆக்கக்கூடாது. ராம ராஜ்யம் அமைய வேண்டும் என்பது எல்லோரது விருப்பம். இந்த ரத யாத்திரை அரசியல் தொடர்புடையது இல்லை. ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்படுகிறது. ரத யாத்திரையை இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் கிஸ்வசந்த் யாதவ் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது இளைஞர் காங்கிரஸ் மாநில  ஊடக பிரிவு செயலாளர் டாக்டர் அனிதா, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்  கிறிஸ்டிரமணி, குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஜெனிஸ்,  குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைவர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அவர் ரத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள பாதைகளை பார்வையிட்டார்.

Tags : Young Kang ,Kanyakumari ,Rath yatra transition ,spokesperson ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...