×

குமரி மாவட்டத்தில் 578 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றம்

நாகர்கோவில், நவ.27: குமரி மாவட்டத்தில் 578 கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அனைத்து மத வழிபாட்டு தலங்கள், விழாக்கால நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விதமான பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு உட்பட்டு குமரி மாவட்டத்தில் நடைபெறும் மதம் சார்ந்த விழா மற்றும் தனிநபர் சுப நிகழ்ச்சிகளிலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகமானது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியானது பயன்படுத்தப்பட்டு வருமானால் அந்த வழிப்பாட்டு தல பொறுப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவுரை வழங்கி வந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களில் அந்தந்த பொறுப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து சுமார் 578 கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றியுள்ளனர்.
 இது போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மதம் சார்ந்த வழிபாட்டு தலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அந்தந்த பொறுப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றாத வழிபாட்டு தலங்களின் பொறுப்பாளர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் காவல்துறை மூலம் குறிப்பாணை சார்பு செய்யப்பட்டும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றாத புதுக்கடை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட இரு வழிபாட்டு தலங்களில் பொறுப்பாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்