×

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ‘பைல்ஸ்’ வாரம்

நாகர்கோவில், நவ. 27: நாகர்கோவில், கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் சல்ய தந்திர பிரிவு சார்பில் மூல நோய் விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் இந்த வாரம் முழுவதும் ‘பைல்ஸ்’ வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் இலவச முகாமில் வழங்கப்பட்டது போன்றே இந்த வாரம் முழுவதும் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, 14 நாட்களுக்கான மருந்துகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.மேலும் தேவைப்படுவோருக்கு சச்சார சூத்ரம் முதலிய பிரத்யேக ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. டாக்டர்கள் ராஜ்பானு, ரமேதா, பிரசாந்த், லேகா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணன், டாக்டர் சுனில்ராய் ஆகியோர் தலைமையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Ayurvedic Medical College ,
× RELATED குமரி அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மேலும் 2 மாணவிகளுக்கு தொல்லை