×

முத்தையாபுரம் அரிமா சங்கத்தினர் புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி, நவ. 27: ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முள்ளக்காடு முத்தையாபுரம் அரிமா சங்கத்தினர் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

 குறிப்பாக ‘கஜா’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பேராவூரணி, நாடகாடு, அதிராமபட்டினம் ஆகிய கிராமங்களுக்கு லாரி மூலம் கொண்டு சென்று ஆயிரம் குடும்பத்தினருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் அரிமா ஆளுநர் சுந்தரராஜன், உபால்ட்ராஜ், மெக்கன்ஸ் தலைவர் கந்தசாமி, செயலாளர் வனமூர்த்தி, பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்கத்தின் முன்னோடி பாண்டியன், சின்னத்தங்கம்,ராமகிருஷ்ணன், ராமசுப்பு, பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று நிவாரணப் பொருட்களை மக்களிடம் நேரடியாக வழங்கினார்.

Tags : Muttiyapuram Aruma Sangham ,
× RELATED கஜா புயல் நிவாரண பொருட்களுக்கு...