×

வரத்து தாமதம் புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் முட்டையின்றி சத்துணவு விநியோகம்

விளாத்திகுளம், நவ. 27:  விளாத்திகுளம் அடுத்த புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் முட்டைகள் வரத்து தாமதமானதால் முட்டையின்றி சத்துணவு வழங்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதூர் ஊராட்சி ஒன்றிய  பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள்  அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒன்றிய பகுதிகளில் முட்டை வரத்து குறைவால் மதிய  உணவுடன் சேர்த்து முட்டை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சரியான  நேரத்திற்கு பள்ளிகளுக்கு முட்டை வழங்கப்படாததால் புதூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட மேலக்கரந்தை, கீழக் கரந்தை, மெட்டில்பட்டி, வெம்பூர், அயன்ராஜாபட்டி  உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையங்களில்  நேற்று மதியம் சத்துணவுடன் சேர்த்து முட்டைகள் வழங்கப்படவில்லை.

 இதையடுத்து சம்பந் தப்பட்ட பள்ளிகளில்  மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படாதது பொது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி களுக்கு தாமதமின்றி முட்டை வழங்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து  கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘‘புதூர் வட்டாரத்தில்  வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து பள்ளி செயல்படும் 5 நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கபபடுகிறது. வாரத்தில் திங்கட்கிழமை வழங்க வேண்டிய முட்டை முந்தைய சனிக்கிழமை அந்தந்த சத்துணவு மையங்களுக்கு  விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாரத்தில் முதல் நாளான  (நேற்று) திங்கட்கிழமை மதியம் சத்துணவுடன் அளிக்க வேண்டிய முட்டை மாணவ  மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்ததில்  நாமக்கல்லில் இருந்து முட்டை வர தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். இதேபோன்று  முட்டை விநியோகம் தாமதத்தால் அவ்வப்போது மாணவ, மாணவிகளுக்கு முட்டை  வழங்குவது தடைபட்டு வருகிறது. எனவே, இனியாவது தடையின்றி சத்துணவில் முட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு’’ என்றார்.

Tags : Pudur Community Colleges of Delay Delay ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்