×

குடியாத்தம் அருகே பரிதாபம் மர்மக் காய்ச்சலுக்கு காங்கிரஸ் பிரமுகர் பலி

குடியாத்தம், நவ.27: குடியாத்தம் அடுத்த சின்னத்தோட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் என்.எஸ்.துரைசாமி(46), காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர். இவர் கடந்த சில தினங்களாக மர்மக்காய்ச்லால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவரது வீட்டிலே பரிதாபமாக இறந்தார்.

இதனால் சின்னதோட்டாளம் பகுதி மக்கள் மர்மக்காய்ச்சல் குறித்து அச்சமடைந்துள்ளனர். மேலும், குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Congressman ,victims ,Gudiyatham ,
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்