×

டெபாசிட் செய்ய உதவுவது போல் வயதான தம்பதியிடம் ₹72 ஆயிரம் சுருட்டல்

திருச்செங்கோடு, நவ.23: வங்கியில் டெபாசிட் செய்ய வந்த தொழிலாளியிடம், உதவுவது போல் நடித்து ₹72 ஆயிரத்தை மோசடி செய்த நபரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.திருச்செங்கோடு கைலாசம் பாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பழனி(65). இவரது மனைவி பாவாயி(60). இருவரும் சேமித்த பணம் ₹72 ஆயிரத்துடன், தெப்பக்குள சாலையில் உள்ள ஒரு அரசு வங்கிக்கு டெபாசிட் செய்ய வந்தனர். இவர்களுக்கு எழுதப்படிக்க தெரியாத காரணத்தால், யாரிடம் போய் உதவி கேட்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், அவர்களிடம் வந்து பணத்தை டெபாசிட் செய்ய தான் உதவுவதாக கூறி, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டார். பிறகு பணத்தையும் வாங்கிக் கொண்ட அந்த நபர், ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு வருவதாக கூறி வெளியே சென்றார். பல மணி நேரம் காத்திருந்தும், அவர் திரும்ப வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார், மோசடி நபரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு