×

தேன்கனிக்கோட்டை அருகே ₹8 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி

தேன்கனிக்கோட்டை, நவ.23: தேன்கனிக்கோட்டை  அருகே காடுமுச்சந்திரம் கிராமத்தில் ₹8 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம்  கட்டும் பணியை எம்எல்ஏ பிரகாஷ் துவக்கி வைத்தார்.  தேன்கனிக்கோட்டை  அடுத்த கோலட்டி ஊராட்சி, காடுமுச்சந்திரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி  திட்டத்தின் கீழ் ₹8 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையத்துக்கு  கட்டிடம் கட்டும் பணியை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ்  எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அஞ்செட்டி ஒன்றிய  பொறுப்பாளர் நாகன், தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, ஒன்றிய  துணை செயலாளர் ஜெயராம், மல்லப்பா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மல்லிகார்ஜூனா, நடராஜ், ஒன்றிய தகவல்  தொழில்நுட்ப அணி ஹேமந்த் சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

Tags : Anganwadi Center ,Dhenkanikkottai ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை