×

பென்னாகரம் அருகே தெருநாய்கள் கடித்து 30ஆடுகள் உயிரிழப்பு

பென்னாகரம், நவ.23: பென்னாகரம் அருகே சிடுவம்பட்டியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 30ஆடுகள் உயிரிழந்தன.பென்னாகரம் அருகே ஏரியூர் சிடுவம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி அர்த்தனாரி. இவர் சிடுவம்பட்டி வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்தார். நேற்று காலை சென்று பார்த்த ேபாது 5ஆடுகள், 25க்கும் மேற்பட்ட குட்டி ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்தனர். இது குறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், ‘சிடுவம்பட்டி பகுதியில் 30ஆடுகள், தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது. மர்ம விலங்குகள் கடிக்கவில்லை,’ என்றார்.

Tags : street ,Bennakaram ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...