×

மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி

மாணவர்கள் சாதனைஅரூர், நவ.23:  தர்மபுரி மாவட்ட அளவில் நடந்த ேடக்வாண்டோ போட்டியில், மகரிஷி வித்யாமந்திர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தர்மபுரி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி, அரூர் எருமியாம்பட்டியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 12 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கோபிநாதம்பட்டி கூட்ரோடில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 7 தங்கப்பதக்கம், 5 வெள்ளி பதக்கம், 10 வெண்கல பதக்கம் வென்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை, பள்ளி முதல்வர் லதா உன்னிகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Maharshi Vidhya Mandir School ,district taekwondo contest ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா