×

கந்தர்வகோட்டை அருகே தென்னை மரங்கள் பாதித்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

கந்தர்வகோட்டை, நவ.23: கந்தர்வகோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைதோப்பில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கஜா புயல் தாக்கத்தால் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் விவசாய பயிர்களும் பெரும் சேதமடைந்தது. இந்நிலையில் வீரடிப்பட்டியில் சங்கீதா தென்னரசு என்பவரது தென்னந்தோப்பில் 1530 தென்னை மரங்கள் கஜா புயல் தாக்கத்தால் அடியோடு சாய்ந்து பெரும் சேதமடைந்தது. இதனால் அவர் கடும் வேதனையில் இருந்து வருகிறார். இந்நிலையில் வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் கூடுதல் இயக்குநர் முகமதுநசீர் ஆகியோர் சென்னையிலிருந்து நேற்று பாதிக்கப்பட்ட தோப்பிற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சேட்முகமது, உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் கணேசன், கந்தர்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சங்கரலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர் அன்பரசன் ஆகியோரும் பார்வையிட்டனர். உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அக்குழுவினர் உறுதி அளித்தனர்.

Tags : Gandharvatte ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே சொத்து தகராறு...