×

கந்தர்வகோட்டை பகுதியில் மின்சாரமின்றி கிராம மக்கள் தவிப்பு

கந்தர்வகோட்டை, நவ.23: கந்தர்வகோட்டை ஒன்றியப் பகுதிகளில் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். கஜா புயல் தாக்கத்தால் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மின்கம்பங்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளது. மேலும் ஏராளமான மரங்கள் மின்கம்பங்களில் சாய்ந்து இன்னும் மீட்கப்படாமல் உள்ளதால் பல கிராமப்புற பகுதிகளில் இன்னும்  மின்விநியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. நகர் பகுதியில் மட்டும் சில இடங்களில் மின்விநியோகம் உள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து மின்சப்ளை கொடுக்க ஊழியர்கள் வேலை செய்து வந்தாலும், சில பகுதிகளுக்கு மின் சப்ளை சரிசெய்ய புதிய மின் சாதனங்கள் கொண்டு செல்லப்படாமல் உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் துயரத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Gandharvatai ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...