×

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை உற்சவம்

பெரம்பலூர்,நவ.23: பெரம்பலூரில் திருக்கார்த்திகை மகா தீபத்தையொட்டி சிவன்கோயில், விநாயகர் கோயில்கள் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கார்த்திகை மாதம் கடந்த 17ம் தேதி பிறந்த நிலையில் இன்று (23ம்தேதி) கார்த்திகை தீபத்திருநாள் தமிழகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு வழிபாடு நடத்தப்படும் வகையில் அண்ணாமலையார் தீபம் ஏற்றுவதை போல தெருக்களின் சந்திப்புகளில், கோயில்களின் முன்பு ஈச்சமர கதிர்கள், பனை மரத்துப்பூக்கள், கரித்தூள், உப்பு போன்றவற்றை பயன்படுத்தி மூங்கில்களால் கூடாரம் அமைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், என்ஸ்பி சாலையிலுள்ள செல்வ விநாயகர் கோயில் முன் பல்வேறு இடங்களில் சிவபக்தர்களால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.



Tags : Sokapapani ,festival ,Brahmapureeswarar temple ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!