×

கறம்பக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

கறம்பக்குடி, நவ.23: கறம்பக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கஜா புயல் தாக்கத்தால் பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனால் கறம்பக்குடி டவுன் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்தன. சாலையில் கிடந்த மரங்களை நேற்று வரை திமுக நகர இளைஞர் அணியினர் அகற்றி போக்குவரத்திற்கு உதவினர். பின்னர் அம்புக்கோவில் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கு பால், ரொட்டி, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி மற்றும் பல்வேறு உணவு பொருட்களை வழங்கினர்.

Tags : DMK ,
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்