×

கரூர் அரசு காலனியில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

கரூர், நவ. 23: கரூர் அரசு காலனி பகுதியில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வெங்கமேடு மேம்பாலம் பகுதியில் இருந்து அரசு காலனி பகுதிக்கு விரைவாக செல்லும் வகையில், விவசாய நிலங்களின் அருகே பாதை வசதி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே மண்சாலையாக இருந்து வரும் இந்த சாலை மேடும் பள்ளமுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சாலை மேலும் மோசமடைந்து, நடந்து செல்லவே முடியாத நிலையில் சாலையின் தரம் உள்ளது. மேலும் தப்பித்தவறி இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதன் வழியாக செல்ல நேரிட்டால் கடும் அவதியை சந்திக்கும் நிலையில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக நிரம்பியுள்ளது. எனவே வாகன ஒட்டிகள் எளிதாக செல்லும் வகையில் இந்த சாலையை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road ,Vengammedu ,Karur Government ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...