×

வீட்டிற்குள் நுழைந்த இருதலை மணியன் ஆண்டிபட்டியில் பரபரப்பு

ஆண்டிபட்டி,நவ.23: ஆண்டிபட்டியில் வீட்டிற்குள் இருதலை மணியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு தெற்கே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு பின்புறத்தில் பேபி என்பவரின் வீட்டிற்குள் இரு தலை மணியன் பாம்பு நுழைந்தது. இதனால் பதற்றமான அவர், தகவலறிந்த ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து இருதலை மணியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருதலை மணியன் பாம்பை பத்திரமாக மீட்டு மலைப்பகுதியில் விட்டனர்.

Tags : house ,entrants ,
× RELATED டெல்லியில் ஒன்றிய அமைச்சர் வீடு முற்றுகை..!!