×

பாலியல் கொடுமை கண்டித்து போராட்டம் திருப்புத்தூரில் உதவி செயற்பொறியாளரை திடீரென தாக்க முயற்சி மின்ஊழியர் சஸ்பெண்ட்

திருப்புத்தூர், நவ. 23:  திருப்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று உதவி செயற்பொறியாளரை தாக்க முயன்ற மின் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் கஜா புயலால் ஏற்பட்ட மின்பாதிப்புகளை ஒரு பகுதியில் மட்டும் சரி செய்துவிட்டு மற்ற பகுதிகளில் சீரமைக்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து, அச்சரம்பட்டி, ஆவனிப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்பழுதை சரிசெய்யக்கோரி தொடர்ந்து திருப்புத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில் கீழச்சிவல்பட்டி பகுதியில் வயர்மேனாக பணிபுரிபவர் நாகப்பன்(54) என்பவரிடம் மின்வாரிய அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை அப்பகுதியில் உள்ள பழுதை சரிசெய்ய தெரிவித்துள்ளார். ஆனால் நாகப்பன் அந்த வேலையை செய்யாததால், நேற்று அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, உதவி செயற்பொறியாளரை நாகப்பன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மின்வாரியத்தின் மாவட்ட கண்காணிப்பு மேற்பார்வையாளர் சின்னையா உத்தரவின் பேரில், திருப்புத்தூர் மின்துறை உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை, மின் ஊழியர் நாகப்பனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

Tags : Fight Against Sexual Harassment ,Assistant Operator ,Thirupathur ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்