×

பேரையூர் பகுதியில் கிளியாஞ்சுட்டிகள் விற்பனை மந்தம்

பேரையூர், நவ. 23: பேரையூர் பகுதியில் கார்த்திகை தீப கிளியாஞ்ச்சுட்டிகள் விற்பனை வெகுவாக குறைந்து வருவதால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கார்த்திகை தீப நாட்களில் அதிகளவில் தீப கிளியாஞ்ச்சுட்டி பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது அந்த கலாச்சாரம் கொஞ்சம், கொஞ்சமாக மாறி முற்றிலும் குறைந்து வருகிறது.

ஏற்கனவே மண்பாண்ட தொழில் நலிவடைந்த நிலையில், கார்த்திகை திருவிழாவிற்கு ஜோராக விற்பனை நடைபெறும் தீப கிளியாஞ்ச்சுட்டிகளை தற்போது கூவி, கூவி விற்றாலும் பொதுமக்கள் வாங்கும் ஆர்வத்தை குறைத்து விட்டனர். பேரையூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் ஒருவாரமாக 100 கிளியாஞ்சுட்டிகளை விற்க முடியாமல், வெயிலை பொருட்படுத்தாமல் விற்கும் ஆர்வத்தை ஒருபோதும் தன்னம்பிக்கை இழக்காமல் விற்று வருகிறார். காலம், காலமாக பயன்படுத்தி வந்த கிளியாஞ்ச்சுட்டிகளை வாங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வளம்பெற
செய்வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : area ,Peraiyur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...