×

வேதாரண்யத்திற்கு 16 டன் காய்கறிகளை அனுப்பிய ஒட்டன்சத்திரம் வியாபாரிகள்

திண்டுக்கல், நவ. 23:  புயல் பாதித்த வேதாரண்யம் பகுதிக்கு 24 வகை காய்கறிகள் 16 டன் அளவிற்கு ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் அனுப்பினர். இவற்றின் மதிப்பு ரூ.8லட்சம் ஆகும். நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கஜா புயலினால் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் அதிகம் சாய்ந்ததுடன், ஏராளமான வீடுகளும் சேதமாகி உள்ளன. இவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி மாவட்டத்திலும் இதுபோன்ற பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் 48 வகையான அத்யாவசியப் பொருட்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டன.தொடர்ந்து நேற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் 16 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டன. இதில் உருளை, பெல்லாரி, முட்டைக்கோஸ், மிளகாய், செளசௌ, பீட்ரூட், பீன்ஸ், மாங்காய், அவரை, வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட 24 வகையான காய்கறிகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கலெக்டர் வினய் கொடியசைத்து இவற்றை அனுப்பி வைத்தார். மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் இதுபோன்ற நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டு கொண்டார்.

Tags : traders ,Vedaranyam ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...