×

கோமாரி நோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

கொடுமுடி,நவ.23: கொடுமுடி அருகே வடக்குபுதுப்பாளையத்தில் கால்நடை வளர்போருக்கு கோமாரி நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மாவட்ட கால்நடைத்துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது.  

நேற்று வடக்குபுதுப்பாளையத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஈரோடு மாவட்ட  கால்நடைதுறை அலுவலர்கள் உதவி மருத்துவர்
ஜெயலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது  கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும், தொழுவங்களை சுத்தமாக வைத்திருக்வேண்டியது குறித்த செய்முறை விளக்க கையேடுகளை  வழங்கினர்.
தற்போது கோமாரி நோய் தாக்கம் உள்ள இந்த சூழ்நிலையில் புதிய கால்நடைகளை அறிமுகமில்லாத பகுதிகளில் இருந்து வாங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags : Komari ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி முகாம்