×

பண்ருட்டி அருகே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி, நவ. 23:பண்ருட்டி அருகே சோழவல்லி, திடீர்குப்பம் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் தேங்கி குட்டைபோல் உள்ளது. இதன் காரணமாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து திடீர்குப்பத்தில் வசித்து வந்த கோபால் என்பவர் சிக்குன்குன்யா நோயினால் பாதிப்படைந்துள்ளார். தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த தாசில்தார் ஆறுமுகம் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்து நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு உடனடியாக தண்ணீரை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Tags : Panrutti ,
× RELATED பறக்கும் படை சோதனையில் ₹86 ஆயிரம் சிக்கியது