×

45 பேர் மீது சிபிஐ வழக்கு திருச்சி மாவட்டத்துக்கான நபார்டு வங்கியின் ரூ.8924.75 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

திருச்சி, நவ.22: திருச்சி மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் ரூ.8924.75 கோடி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ராஜாமணி நேற்று வெளியிட்டார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டம் 2019-20ம் ஆண்டிற்கான ரூ.8924.75 கோடி கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி  வெளியிட்டார். இதில் திருச்சி மாவட்டத்திற்க 2019-20ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.309022.25 லட்சம், விவசாய முதலீட்டு கடன் ரூ.104280.91 லட்சம், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.18838.19 லட்சம், விவசாய இதர கடன்கள் ரூ.50061.39 லட்சம் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.482202.74 லட்சம் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.172148.75 லட்சம், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.174921 லட்சம் அடிப்படை கட்டுமான வசதி ரூ.22583 லட்சம் சுய உதவிக்குழுக்கான கடன் அளவு ரூ.31198  லட்சம் என மொத்தம் ரூ.8924.75 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். மேலும் வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் பேரில் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும். மேலும் இந்த திட்ட அறிக்கையை ஓர் முன் மாதிரியாக வைத்து தங்களது கிளைக்கான கடன் திட்ட குறியீட்டை தயார் செய்து அதை குறிப்பிட்ட படிவத்தில் முன்னோடி வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.  இதில் முன்னோடி வங்கி மேலாளர் வைத்தியநாதன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : CBI ,district ,Nabard Bank ,Trichy ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...