×

தோகைமலையில் இருந்து கோடியக்கரைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

தோகைமலை, நவ.22: வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தோகைமலையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களுக்கு முன் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோடியக்கரை பகுதி கடைகோடியாக இருப்பதால் நிவாரணம் பொருட்கள் சரிவர கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதை அறிந்த தோகைமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேனில் ஏற்றிக் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு சமயல் செய்து வழங்குவதற்காக சுமார் 30 இளைஞர்கள் வேனில் சென்றனர்.

Tags : Kotakarai ,
× RELATED கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள...