×

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மருத்துவர் பற்றாக்குறை அடிப்படை வசதிகளும் ஓட்டை

அருப்புக்கோட்டை, நவ. 22: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், போதிய மகப்பேறு மருத்துவர் இலலாததால், கர்ப்பிணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், பலர் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அருப்புக்கோட்டையில் தேசிய தரச்சான்று பெற்ற அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு பிரிவில், உள்ளுர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக வருகின்றனர். இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் சீமாங் அந்தஸ்தை பெற்றுள்ளது. முன்பு 5 மருத்துவர்கள் இருந்தபோது, மாதந்தோறும் 200க்கு பிரசவ கேஸ்கள் பார்க்கப்பட்டன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மகப்பேறு பிரிவில் மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவர்களில் மேற்படிப்பு, பிரசவ விடுப்பு என சிலர் வெளியூர் சென்றுவிட்டனர். இதனால், டெபுடேசன் அடிப்படையில் ராஜபாளையம் மற்றும் திருச்சுழியிலிருந்தும் 2 மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் மாதத்திற்கு 9 நாட்கள் மட்டுமே வருகின்றனர். மற்ற நேரங்களில் மகப்பேறுக்கு வரும் கர்ப்பிணிகளை விருதுநகருக்கு அனுப்பி விடுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வரும் கர்ப்பிணி பெண்கள், மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனால், ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம், அறுவை கிசிச்சைக்குப்பின் கவனிப்பு பிரிவு, சுகப்பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு என வசதிகள் உள்ளன. வசதிகள் இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லாமல் கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர்.

Tags : physician ,facilities ,Aruppukkottai ,government hospital maternity division ,
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்