×

மிலாது நபி விழா

சாயல்குடி, நவ.22:  சாயல்குடி அருகே இருவேலி, ஒப்பிலான், மாரியூரில் மிலாதுநபி விழா கொண்டாடப்பட்டது. சாயல்குடி அருகே எம்.மாரியூரில் மிலாதுநபி விழா கடந்த திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு துவா நடத்தப்பட்டது, நேற்று கொடி ஊர்வலம், பொது அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் முத்து முகம்மது தலைமை வகித்தார். இரவில் குதிரையாட்டம், இஸ்லாமிய கச்சேரி நடந்தது. இன்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags : Milad ,ceremony ,Prophet ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா