×

வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்

வாலாஜாபாத், நவ. 22: வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவை மட்டுமின்றி  பேருந்து நிலையம் காவல் நிலையம் சார்பதிவாளர் அலுவலகம், ரயில் நிலையம், பேரூராட்சி அலுவலகம், வங்கிகள் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி இந்த வாலாஜாபாத்தை சுற்றிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வடகரம், பெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து  மேலே குறிப்பிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செங்கல்பட்டு, கல்பாக்கம். தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இந்த வாலாஜாபாத் வந்துதான். இங்கிருந்து செல்கின்றன. மேலும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் கிராமப்புற பேருந்துகளும் இந்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்துதான் சென்று வந்தன.

இந்த சூழ்நிலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்துக்கு மூன்று புறமும் மேற்கூரைகள் அமைத்து மழை வெயிலில் பொதுமக்களும் பயணிகளும் நினையக்கூடாது என்பதற்காக கோடி கணக்கில் செலவு செய்து அரசு மேற்கூரை அமைத்தது.  ஆனால் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகளே இல்லை. இந்த பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் பேருந்து நிறுத்தும் இடத்தில் திண்ணை போல் அமைந்துள்ள பகுதியில் உட்காருகின்றனர். இதனால் எப்பொழுதும் விபத்து ஏற்படும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இவை ஒருபுறம் இருக்க, தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளும் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் ஒரு சில கிராமப்புற பேருந்துகள் மட்டுமே இந்த பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன. மீதம் உள்ள செங்கல்பட்டு தாம்பரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாததால் தாம்பரம் செல்லவேண்டிய பயணிகள் பேருந்தின் முன் பகுதியில் மழையிலும் வெயிலிலும் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதேபோல் செங்கல்பட்டு மகாபலிபுரம் உள்ளிட்ட பல்லேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள ரவுண்டானா பகுதியில் வெயிலிலும் மழையிலும் அருகாமையில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்து பேருந்து ஏறும் அவல நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பேருந்துக்காக கடைகள் முன்பு காத்திருக்கும்போது கடை உரிமையாளர்களுக்கும் காத்திருக்கும் பயணிகளும் மிடையே நாள்தோறும் வாய் தகராறு ஏற்படுகிறது இந்த சூழ்நிலையில் மழைக்காலங்களிலாவது செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலாஜாபாத் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பேருந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பயணிகளுக்கு இருக்கைகளும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bus stand ,
× RELATED பைக் திருடியவர் கைது