×

மின்சாரம், குடிநீர் இல்லாததால் மணப்பாறை பகுதியில் 4 இடங்களில் சாலைமறியல்

மணப்பாறை, நவ.21:  மணப்பாறை பகுதியில் கஜாபுயல் தாக்கத்தால் குடிநீர், மின்சார விநியோகம் இல்லாததை கண்டித்து நேற்று 4 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர், மின்சார வசதியின்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் நடத்தியும் குடிநீர், மின்சார வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர், மின்சார வசதி கேட்டு மணப்பாறை அடுத்த செவலூரில் நேற்று காலை 8 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் புயலால் சாய்ந்து கிடக்கும் மரங்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் குடிநீர், மின்சாரம் இல்லாததை கண்டித்து விராலிமலை ரோட்டில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதேபோல் மணப்பாறை பாரதியார் நகரிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.  அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பாறை எடத்தெருவில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மணப்பாறை பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாததை கண்டித்து நேற்று ஒரே நாளில் 4 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

Tags : places ,area ,Marmara ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!