×

குண்டர் தடுப்பு சட்டத்தில் செயின் பறிப்பு ஆசாமி கைது

கடலூர், நவ. 21: பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்டம் சின்னமனம் பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மனைவி ஆதிலட்சுமி(55) என்பவர் கடந்த 22.9.2018ல் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.இதுபோன்று விளம்பரம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நந்தினி(28) என்ற பெண்ணிடம் 5 பவுன் செயினை  பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார்(23) மற்றும் அவரது நண்பர் நவீன்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அருண்குமார் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி தொடர்பாக வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் பேரில் அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அருண்குமார் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Assam ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...