×

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 362 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரின் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு

தரங்கம்பாடி,நவ.21: செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள 362 குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் உள்ள தண்ணீரில் குளோரின் கலந்து உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். மழை பெய்து வருவதால் நோய் பரப்பும் கிருமிகள் தண்ணீர் மூலம் பரவும் என்பதால் குடிநீர் குளோரின் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.  குளோரின் தன்மை கொண்ட தண்ணீரால் மட்டுமே கிருமி நிறைந்து பொதுமக்களை காப்பாற்ற முடியும் என்பதால் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள 362 குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் உள்ள தண்ணீரில் குளோரின் தன்மை உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் மோகனசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : area ,Sembanarko ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது