×

2018 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பிரிமியம் தொகை வாங்க மறுப்பு விவசாயிகள் தவிப்பு

தரங்கம்பாடி,நவ.21: நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 2018 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு பிரிமியம் தொகை செலுத்த சிட்டா அடங்கல் வழங்காததால் விவசாயிகள் பிரிமியம் தொகை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை பெற்ற சிட்டா அடங்கல் தேவைப்படுகிறது. தரங்கம்பாடி வட்டத்தில் பல வருவாய் கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பக்கத்தில் பணியாற்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாத கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் இல்லாத கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பிரிமியம் கட்ட பொறுப்பு கிராம அலுவலர்கள் சிட்டா அடங்கல் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதனால் பிரிமியம் தொகை கட்ட 30ம் தேதி கடைசி என்பதால் பிரிமியம் கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே தரங்கம்பாடி தாசில்தார் உடனடியாக கவனம் செலுத்தி அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர சிட்டா அடங்கல் விவசாயிகளுக்கு கிடைக்க தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : season ,Rabi ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு