×

மூலிமங்கலம் பிரிவு சாலையில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், நவ. 21: குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் வேலாதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலையில் தனியார் பள்ளி ஒன்றின் அருகே இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளைப்போல காணப்படுகிறது. மேலும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் கிழிந்தமெத்தை போன்ற பொருட்களையும் கொண்டு வந்து கொட்டி விட்டு போய் விடுகின்றனர்.

குப்பை மேலாண்மை திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. மேலும் உள்ளாட்சித்தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. தனி அதிகாரிகள் தான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனால் சுகாதார சீர்கேட்டில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்களும் சுகாதார கேட்டினால் சிரமப்படுகின்றனர். குப்பை கொட்டப்படுவதை இனியாவது பேரூராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Moolimangalam ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது