×

இலவசமாக எடுத்துச் செல்லலாம் ஆம்னி பஸ்களில் ‘கஜா’ நிவாரணம்

சென்னை: தமிழகத்தில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை, ஆம்னி பஸ்களில் இலவசமாக எடுத்துச்செல்லலாம் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ‘கஜா’ புயலின் தாக்கத்தால், நாகை, வேளாங்கண்ணி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பலரும் நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அரசு பஸ்களில் இலவச மாக நிவாரணங்களை எடுத்துச்செல்லாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதைதொடர்ந்து ஆம்னி பஸ்களிலும் இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்வதற்கு, அதன் உரிமையாளர்கள் அனுமதி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘‘புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இலவசமாக நிவாரணப்பொருட்களை ஆம்னி பஸ்களில் எடுத்துச்செல்லலாம். நிவாரணப்பொருட்களை அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம், எப்4, மெஜஸ்டிக் காம்ப்ளக்ஸ், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு, சென்னை-107, போன்-81480 45678, 04442818348 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Tags : ride ,Omani ,
× RELATED ‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை – திரைவிமர்சனம்