×

கடமலைக்குண்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் குளறுபடி பொதுமக்கள் ஆவேசம்

வருசநாடு, நவ. 21: கடமலைக்குண்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் குளறுபடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் மெயின் ரோட்டில் இரு பக்கங்களும் கடைகள் வீடுகள் அதிகமாக இருந்தன. இதனால் தேனி முதல் வருசநாடு செல்லும் சாலை என்பதால் 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. இதைத்தொடர்ந்து அது சம்பந்தமாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி அதற்கான சர்வே பணியும் நடைபெற்றது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நவம்பர் 13ம் தேதி ஆக்கிரமிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் காலக்கெடு கொடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுக்கொள்வதாக பொதுமக்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று 20ம் தேதி முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பு அகற்றுவதில் குளறுபடி இருக்கிறது. இதில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். இதனால் செல்வவளம் மிக்க நபர்களுக்கு உடந்தையாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றி தார்ச்சாலை அமைக்க வேண்டும். மேலும் இரு புறங்களிலும் முறையான சாக்கடைகள் சிறு பாலங்கள் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,village ,Kadimakalukku ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...