×

பாஜக ஆலோசனை கூட்டம் இல.கணேசன் பங்கேற்பு

திருப்பரங்குன்றம், நவ.21: திருப்பரங்குன்றத்தில்  பாஜக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்  இல.கணேசன் கலந்துகெண்டார். அப்போது அவர் பேசியதாவது, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம், கோஷம் எழுப்பலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடக் கூடாது. எனவே அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரண தொகையை நேரிடையாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் தான் முழு தொகையும் பயனாளிகளுக்கு கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம்.
ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வர வேண்டும் என தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, இடைத்தேர்தலே நடைபெறுமா? என்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிறகு பார்க்கலாம் என்றார்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...