×

கூட்டுறவு வங்கி சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

சோழவந்தான், நவ.21: மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கியில் 65வது கூட்டுறவு சங்க வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு மழைக்கால நோய்களைத் தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  வங்கி வாயிலில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன், பொது மேலாளர் வீரணன், துணைத் தலைவர் ஜவஹர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். நிகழ்ச்சியில் வாடிப்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் செல்லப்பாண்டி மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : cooperative bank ,
× RELATED தாய், மகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பஸ்