நத்தம் பகுதியில் கஜா நிவாரண பணிகள் முழுமையாக நடக்கவில்லை ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோபால்பட்டி, நவ. 21:  நத்தம் பகுதியில் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயலுக்கு திண்டுக்கல் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தென்னை, மா, புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்ததால் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வரை மின்சாரம் இல்லை. இந்நிலையில் நேற்று புயலால் தாக்கிய சிறுமலை பகுதிகளை ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘நத்தம் பகுதியில் புயல்காற்றால் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது. கிராமப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கவில்லை. குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். புயல் நிவாரண பணிகள் முழுமையாக நடக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>