×

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழக கவர்னரை அழைக்க முடிவு

குலசேகரம் நவ. 21: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு  தமிழக கவர்னரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வரும் டிசம்பர் 18ம் தேதி  நடைபெறவுள்ள  வைகுண்ட ஏகாதசி விழாவை  சிறப்பாக நடத்த விழா குழு அமைப்பதற்கான  கூட்டம் திருவட்டாரில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்,  ஆதிகேசவா சேவா டிரஸ்ட் தலைவர் தங்கப்பன் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் சொர்க்க வாசல் நடை திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர்  கலையரசன் தலைமையில் திருவிழா குழு அமைக்கப்பட்டது. மேலும் இக்குழுவுடன் சேர்ந்து செயல்படும் வகையில் பல்வேறு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. சொர்க்க வாசல் நடைதிறப்பு விழாவிற்கு தமிழக கவர்னரை அழைக்கவும்,  வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளூர் விடுமுறை வழங்க தமிழக அரசை கேட்டும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 திருவிழாவில் மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, தீ அணைப்பு துறை, உள்ளாட்சி  நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்   துறையினர், போக்குவரத்து துறையினர்  ஆகியோரின்  ஒத்துழைப்பு கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Governor ,Thiruvattarai Adikesakavu Perumal ,Tamil Nadu ,Vaikuntha Ekadasi Festival ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...