×

தேரேகால்புதூர் நாஞ்சில் நகரில் குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு

நாகர்கோவில், நவ. 21:  நாகர்கோவில் அடுத்த தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட நாஞ்சில் நகர் தெற்கு 4 வது தெருவில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகி கிடக்கின்றன. இவற்றில் மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே குழந்தைகள், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வீட்டுக்கு ஒருவர் வீதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை எந்த வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். இது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக தேரேகால்புதூர் ஊராட்சி பணியாளர்கள் நேற்று நாஞ்சில் நகர் 4வது தெருவில் உள்ள குண்டும் குழியுமான பகுதிகளில் மண் கொட்டி நிரப்பினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தெருவில் உள்ள குண்டும் குழியுமான பகுதியில் மண்கொண்டு கொட்டுவது நிரந்தர தீர்வு ஆகாது. எங்களுக்கு தெருவில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்து கொடுத்து தெருவில் காங்கீரிட் சாலை அமைத்து தரவேண்டும் என்றனர்.

Tags : city ,Terekulpudur Nanjil ,
× RELATED காசி நகரம் பைரவ வழிபாடும்