×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்லுயிர் காடுகளை துவம்சம் செய்த கஜா

புதுக்கோட்டை, நவ.20: கஜா புயலின் கோர தாண்டவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயிரம் பல்லுயிர் காடுகள் அழிந்து நாசமாகிவிட்டன. மீண்டும் இந்த காடுகளை உருவாக்க பல கோடிகள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்லுயிர் காடுகள் உள்ளது. இந்த பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வளர்ந்து தளிச்சி கிடந்தது. இதனால் அப்பகுதிக்கு செல்லும்போது கொடைக்கானல் மலைக்காடுகள் போல் காணப்பட்டது. குறிப்பாக பல தலை முறைகளாக இருந்த பல மரங்கள் அதிக அளவில் இருந்தது. விவவிதமான செடி, கொடிகள் மண்டி கிடந்தது. இந்த காட்டு பகுதியில் மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள் போன்ற விலங்குள், புரா உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் காணப்பட்டது. மேலும், அரிய வகை மூலிகை செடிகளும் இக்காட்டில் இருந்தது. இக்காட்டு பகுதிக்குள் சென்றாலோ குருவிகள், பறவைகள் சந்தம் மனதிற்கு இதமாக இருக்கும். இந்த காட்டுகள் மனிதர்கள் செல்ல முடியாத வகையில் வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் கஜாபுயலின் கோர தாண்டவத்தால் இக்காட்டில் உள்ள அனைத்து மரங்களும் வேறுடனும், கிளைகள் முறிந்தும், செடி கொடிகள் அனைத்தும் காற்றில் அடித்து சென்றுவிட்டது. இந்த காட்டு பகுதியில் உயிர்வாழ்ந்த மழை வண்டுகள், பறவைகள், மான்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தற்போது காடு பறவைகள் சத்தம் ஏதுமின்றி அமைதியாக இருக்கிறது. இதுபோன்ற காடுகள் மீண்டும் உருவாக குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். வனத்துறையின் மூலம் பலகோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது: பல்லுயிர் காடுகள் மனிதனால் உருவாக்க முடியாது. அது கால சூழ்நிலைக்கும், சிதோஷ்ன நிலைக்கும் ஏற்ப உருவாகக்கூடியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தாக்கிய கஜா புயல் காரணமாக நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பல்லுயிர்காடுகள் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. மரங்கள் அனைத்தும் முறிந்து தொங்கி கொண்டு இருக்கிறது. இனிமேல் மீண்டும் பழயை நிலைக்கு வர வேண்டுமானால் 25 ஆண்டுகள் கண்டிப்பாக ஆகும். அதுவரை வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Gaja ,district ,Pudukottai ,
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை