×

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

அரியலூர்,நவ,20: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தனது குழந்தைகளுடன் தற்கொலை  முயற்சியில் ஈடுபட்டார். அரியலுர் மாவட்டம் ஆண்டிமடம் காவல்நிலைய சரகத்தை சேர்ந்த  சிலம்பூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 2 மாதம் முன்  மர்ம மரணம் ஏற்பட்டு இறந்தவர், பின் புதைக்கப்பட்டார். ரமேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் எழுந்ததையடுத்து கடந்த மாதம் ரமேஷின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த ரமேஷ் மனைவி விஜயலெட்சுமி மற்றும் மகன் ராகுல் மற்றும் ரகு  மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டனர். தனது கணவர் ரமேஷின் வழக்கு கொலை வழக்காக மாற்றாததால் தனது  2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. தகவலறிந்து வந்த  அரியலூர் போலீசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Tags : Aryalur Collector ,sons ,
× RELATED கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை