×

திருத்தணியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருத்தணி, நவ. 20: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், திருத்தணியில் நேற்று முன்தினம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சியாமளா முரளிகிருஷ்ணன், சரவணன் முனிரத்தினம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சேகர் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி  சிறப்புரையாற்றினார்.
 
இதைத் தொடர்ந்து, கட்சியின் மாநில பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டதுக்கு வாழ்த்து தெரிவித்தும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கிராம, நகர, பேரூராட்சியில் பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர் ஞானமுத்து, ஒன்றிய செயலாளர்கள் திருத்தணி சுரேஷ்பாபு, கணபதி, ரஜினிகாந்த், நகர செயலாளர் தாமு, சங்கர், மணி, மகேந்திரன், ராம், பேரூர் செயலாளர்கள் ஸ்டாலின், பெருமாள், தாமோதரன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதாப் நன்றி கூறினார்.

Tags : Debate Administrators Consultative Meeting ,
× RELATED புதிய டெண்டர் விடும் வரை மெரினா,...