×

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம், நவ. 20:  காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டுவண்டித் தொழிலாளர்கள்  கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பாளையம், எல்.என்.புரம், ஈசலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மாட்டுவண்டி மூலம் மணல் எடுத்து நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எங்கள் குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாட்டுவண்டித் தொழிலாளர்களாகிய நாங்கள் காவல் துறையால் பலவழிகளில் துன்புறுத்தப்படுகிறோம். குறிப்பாக மாடு, மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்கின்றனர். மேலும் கடுமையான அபராதங்கள் விதிக்கின்றனர். இதனால் எங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறோம். எனவே, மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பாலாற்றில் மணல் அள்ள மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : petitioners ,
× RELATED அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்