×

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை,நவ.19: பணகுடி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த 9ம் தேதி தனது 16 வயது மகள் காணவில்லை என பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன்பேரில்  போலீசார், இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வள்ளியூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அந்த பெண்னை போலீசார் மீட்டு பணகுடி  காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் டேவிட்ரவிராஜன், எஸ்.ஐ அருண்ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் பணகுடி விவசாய வங்கி தெருவை சேர்ந்த ஐயப்பன்(24) என்பவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஐயப்பனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : pope ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு