×

கொட்டாரத்தில் திமுக உறுப்பினர் அட்டை விநியோகம்

கன்னியாகுமரி,  நவ.16:  அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் திமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பணி கொட்டாரம் அலுவலகத்தில் தொடங்கியது. ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை வகித்தார். திமுக தலைமை கழக பிரதிநிதி சுரேஷ் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முத்துசுவாமி, கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்டபெருமாள், இலகாந்தி, ஆட்டோ பால்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் யோபு, குலசேகரபுரம் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு நேரடியாக சென்று உறுப்பினர் அட்டைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.

Tags : DMK ,Kottaram ,
× RELATED ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு..!!