×

ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி முன்பு மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ. 16:  அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருந்தாளுநர்களை மாற்றுப்பணியில் அனுப்புவதை கைவிடவேண்டும். மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கி ஆட்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம்  சார்பில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டைட்டஸ் தலைமை வகித்தார். இணை செயலாளர் அஜித், மாவட்ட அமைப்பு செயலாளர் போபி, மாவட்ட செயலாளர் சுப்பையா, துணை தலைவர் விக்டர் ஜோன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Pharmaceuticals ,hospital clinic ,
× RELATED கோவிஷீல்டு மட்டுமல்ல…. கோவாக்சின்...