×

கந்தசஷ்டியையொட்டி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம்

தா.பழூர்,நவ.16: தா.பழூர் சிவாலயத்தில் முருகன் மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருகன் கோயில்களில் நடைபெறும் விழாக்களில், ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய கந்தசஷ்டி மிகவும் முக்கியமானது. 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு, சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் பொருட் செல்வம், குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி தா.பழூர் சிவலாயத்தில் முருகன், வள்ளிக்கு பூலோக முறைப்படி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், சந்தணம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி ஆகிய வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, சிறப்பு மந்திரங்கள் முழங்க வில்லேந்திய வேலவர் மற்றும் அம்பாளுக்கு பூலோக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.  முன்னதாக மேளதாளத்தோடு சீர்வரிசைகள் எடுத்துவரப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Murugan ,Valli ,Deivanai Thirukkalaya ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...