×

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் பிரசாரம் செய்வேன் விஜய பிரபாகரன் பேட்டி

மணப்பாறை, நவ.15:  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று விஜய பிரபாகரன் கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தே.மு.தி.க. கொடியேற்று விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அரசியலுக்கு நான் இப்போது தான் வந்துள்ளேன். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமையே முடிவு எடுக்கும். நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் அனுமதி பெற்று பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றார். அப்போது திருச்சி மாவட்ட தேமுதிக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகோபால், ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : announcement ,election ,Vijaya Prabhakaran ,
× RELATED முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு...