×

மாதேஸ்வரன் மலை பள்ளத்தாக்கு அருகே அரசு, தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மேட்டூர், நவ. 15:கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை அருகே தமிழக அரசு பேருந்தும், தனியார் ேபருந்தும் நேருக்கு நேர், மோதிய விபத்தில் 4பெண்கள் உள்பட 16க்கும் ேமற்பட்ேடார் படுகாயமடைந்தனர். சாலையோர பள்ளத்தாக்கு அருகே நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  மேட்டூரில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு ேபருந்து நேற்று காலை மைசூருக்கு புறப்பட்டது. காலை 9மணியளவில் நடுமலை மாதேஸ்வரன் கோயில் பகுதியில் சென்றபோது, எதிரே கொளத்தூரை சேர்ந்த தனியார் பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் இரண்டும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்து கண்டக்டரான ஈரோடு சிவகரட்டூரை சேர்ந்த  பழனிசாமி (23) படுகாயமடைந்தார்.

மேலும் அரசு 2பேருந்துகளிலும் வந்த ஊரல்கோட்டை மயிலி (40), கோம்பூரான்காடு மாரியப்பன் (45), மாதேஸ்வரன் மலையை சேர்ந்த விஜயா (28), வள்ளி (38), முத்தம்மாள் (70), சந்திரன் (42), ரவி (42), கணேசன் (46), ராமலிங்கம் (65), கரூர் நடராஜன் (42), கொளத்தூர் மாதேசன் (45), மேட்டூர் கார்த்திக் (35), ராமன்நகர் மாதையன் (70), காமலாபுரம் நாகராஜன் (54) உள்பட 16க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக மேட்டூர்- மாதேஸ்வரன் மலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் தகவல் தொழில்நுட்ப தொடர்புகளுக்கும் வழியில்லை. இதனால் காயமடைந்தவர்கள் டூவீலர்களிலும், டெம்போக்களிலும் ஏறி, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘‘விபத்து நடந்த மாதேஸ்வரன் கோயில் நடுமலைப்பகுதியில் சாலையோரத்தில் அடர்ந்த மரங்களுடன் கூடிய 20 அடி பள்ளத்தாக்கு உள்ளது. பயங்கர சத்தத்துடன் பேருந்துகள் நேருக்குநேர் மோதிய போது, பள்ளத்தில் கவிழ்ந்து விடுமோ என்ற அதிர்ச்சியில் உறைந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக சாலையிலேயே நின்றதால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து தப்பினோம்’’ என்றனர். விபத்துக்கான காரணம் குறித்து மாதேஸ்வரன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : state government ,valley ,accident ,Madheswaran Hill ,
× RELATED சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும்...