×

சமுதாய விழிப்புணர்வு பாடல் புத்தகம் வெளியீடு

கிருஷ்ணகிரி, நவ.15:  ஜேஆர்சி அமைப்பு சார்பில் சமுதாய விழிப்புணர்வு பாடல் புத்தகத்தை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.
 கிருஷ்ணகிரி மாவட்ட ஜேஆர்சி அமைப்பின் கன்வீனரும், தேசிய பயிற்சியாளரும், பாலேகுளி அரசு பள்ளியின் கணித ஆசிரியருமான பாலமுருகன், சமுதாய அக்கறை கொண்டு கல்வி, கலாச்சாரம், சுற்றுப்புறத்தூய்மை, ரத்த தானம், கண் தானம், டெங்கு காய்ச்சல், பசுமைத் தாயகம், நோய்த்தடுப்பு, சுகாதாரம், சாலை விதிகள், தேசப்பற்று, பெண்களின் முன்னேற்றம், குழந்தை தொழிலாளர், இளம் வயது திருமணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 100 பாடல்களை “இன்னிசை 100” என்ற தலைப்பில் உருவான தனது புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் மாணவர் முதல் மக்கள் வரை அனைவரும் படித்து விழிப்புணர்வு பெறும் வகையில் எழுதியுள்ளார்.

 இந்த புத்தக வெளியீட்டு விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை மாவட்ட கல்வி அலுவலர் ராஜா பெற்றுக்கொண்டார். விழாவில், சிஇஓவின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், ஆர்எம்எஸ்ஏ திட்ட அலுவலர் சூசைநாதன், பள்ளித் துணை ஆய்வாளர் ஜெயராமன், பாலேகுளி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், புத்தகப் படைப்பிற்கான ஆலோசகர் அசோக்குமார், ஜேசீஸ் அமைப்பின் தலைவர்கள் ராகேஷ், சிவானந்தம், சமூக ஆர்வலர் அசோக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்று, நூலாசிரியர் பாலமுருகனின் புது முயற்சியை பாராட்டினர். புத்தக வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஜேஆர்சி அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்